தெரியுமா? கழிப்பறைக்குள் செல்போனுடன் சென்றால் இந்த ஆபத்தான பிரச்சனை ஏற்பட்ட அதிக வாய்ப்பு இருக்காம்.. உஷார்..

தெரியுமா? கழிப்பறைக்குள் செல்போனுடன் சென்றால் இந்த ஆபத்தான பிரச்சனை ஏற்பட்ட அதிக வாய்ப்பு இருக்காம்.. உஷார்..



Problems of using cell phone in toilet

கழிவறைக்குள் செல்போனுடன் செல்வதால் மூல நோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.

தமிழ் இன்று பலருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்று கழிவறைக்குள் செல்போனை எடுத்துச்செல்வது. குறிப்பாக வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவர்களிடம்தான் இந்த பழக்கம் அதிகமாக உள்ளது. வெஸ்டர்ன் டாய்லெட்டில் நீண்ட நேரம் அமர்ந்துகொண்டு செல்போனை பார்ப்பதால் நேரம் போவது தெரியாமல் அங்கையே அமர்ந்துவிடுகின்றனர்.

இப்படி நீண்ட நேரம் வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்வதால் கீழ் மலக்குடலில் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதனால் மூல நோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருநாள் மட்டும் இப்படி நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் மூல நோய் வராது, இப்படி நீண்ட நேரம் அமர்வதை தினமும் வாடிக்கையாக வைத்திருக்கும் பட்சத்தில் இந்த நோய் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது. பொதுவாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம், கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உபாதைகள் போன்ற காரணங்களால் மூலம் நோய் வரும்.

எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது மூல நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் எனவும், உடனே மருத்துவர்களை அணுகி முறையான பரிசோதனை மேற்கொள்வதும் அவசியம்.