பிறக்க இருக்கும் 2020 ஆம் ஆண்டில் இப்படி ஒரு சிக்கலா? உஷாரா இருங்க மக்களே!

பிறக்க இருக்கும் 2020 ஆம் ஆண்டில் இப்படி ஒரு சிக்கலா? உஷாரா இருங்க மக்களே!


Problems of mentioning date in 2020

2019 ஆம் ஆண்டு நாளையுடன் முடிவடைந்து 2020 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும், இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமையவேண்டும், நினைத்த காரியங்கள் நடக்கவேண்டும் என அனைவரும் மனதில் நினைப்பது வழக்கமான ஓன்று. 

பிறக்க இருக்கும் இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற தமிழ் ஸ்பார்க் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பிறக்க இருக்கும் 2020 ஆம் ஆண்டில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது? அது என்ன சிக்கல்? வாங்க பாக்கலாம்.

Happy new year 2020

பொதுவாக எந்த ஒரு ஆவணமாக இருந்தாலும் தேதியை குறிப்பிடும்போது வருடத்தை மட்டும் முழு வருடத்தை எழுதாமல் இறுதி இரண்டு இலக்கங்களை மட்டும் எழுதுவது வழக்கம். உதாரணத்திற்கு 2019 என்பதை 19 என குறிப்பிடுவது வழக்கம்.

2020 ஆம் ஆண்டையும் நீங்கள் அவ்வாறு குறிப்பிட்டால் அதில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு 01.02.20 என குறிப்பிட்டீர்கள் என்றால் நீங்கள் குறிப்பிட்ட 01.02.20 என்பதை 01.02.2019 அல்லது 01.02.2000 , 01.02.2001 என முந்தைய வருடங்களுக்கு மாற்ற அதிகம் வாய்ப்புள்ளது.

எனவே பிறக்க இருக்கும் 2020 ஆம் ஆண்டில் முக்கிய ஆவணங்களில் தேதியை குறிப்பிடும்போது முழு வருடத்தையும் மறக்காமல் குறிப்பிடுவது நல்லது.