பாஸ்ட் புட் சாப்பிட்டால் ஃபாஸ்டா போய் சேர்ந்திருவோம்.! மக்களே உஷார்... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.!

பாஸ்ட் புட் சாப்பிட்டால் ஃபாஸ்டா போய் சேர்ந்திருவோம்.! மக்களே உஷார்... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.!



problems-for-eat-fast-food

"ஜங் புட்” களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடற்பருமன் ஏற்படுகிறது. குறிப்பாக நூடுல்ஸ், பீட்ஸா, பிரைட் ரைஸ், உள்ளிட்ட அசைவ உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப் பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன.

இந்த அவசர உலகில் பலரும் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத்தான் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து இயற்கையான உணவுகளை உண்ணடால் ஆரோக்கியமாக வாழலாம். நமது தாத்தா பாட்டி காலத்தில் உண்ட உணவுகளை மட்டும் சாப்பிட்டாலே ஆயுள் நீடிக்கும்.

தினம் காலை, இரவு இலவங்க பட்டை பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்தினால் உடலுக்கு நன்மை கிடைக்கும். ரோட்டில் வைத்து கிண்டி கிண்டி கொடுக்கும் உணவை நீக்கி நீராவி உணவுகளான நாகரீக விரும்பிகளால் வெறுக்கப்படும் இட்லி, இடியாப்பம், கொலுக்கட்டை, புட்டு, அரிசி சாதம்-பழய சாதம் சாப்பிட்டால் நன்மைகள் பல கிடைக்கும்.

கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்த வேண்டும். 
 உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பாஸ்ட்புட் போன்ற உணவுகளை உட்கொண்டு மருத்துவமனையில், மாதம் ஆயிரக்கண்க்கில் செலவு செய்து பர்ஸை நோஞ்சானாக்கி தினமும் மாத்திரைகளை விழுங்கி அதனால் இன்னும் பல உள் உறுப்புக்கோளாறுகளை சன்மானமாகப் பெறவேண்டாம்.