ஹரியாணாவில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மூவரின் புகைப்படங்கள் வெளியானது!!

ஹரியாணாவில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மூவரின் புகைப்படங்கள் வெளியானது!!



police released the photos of rapist in hariyana

ஹரியானாவில் 19 வயது கல்லூரி மாணவி வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு பாலியல் பலத்தகாரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் 12 CBSE தேர்வில் முதலிடம் பிடித்து குடியரசு தலைவரிடம் விருது பெற்றவர் ஆவார்.

இவர் தற்பொழுது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமையன்று அவருடைய கிராமத்திலிருந்து வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் காரில் வந்த மூன்று பேர் மனைவியை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றியுள்ளனர். 

பின்னர் அந்த பெண்ணை ஒரு பண்ணைக்கு கூட்டி சென்ற அந்த கும்பல், அவரை அங்கு வைத்து கொடூரமான முறையில் மாற்றி மாற்றி கற்பழித்துள்ளார். அந்த பண்ணையில் வேலை பார்த்த இன்னும் சிலரும் கற்பழித்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அந்த பெண் தன் சுயநினைவை இழக்கும் வரை கொடூரமாக கற்பழித்துள்ளனர் அந்த காமவெறி பிடித்த கும்பல்.

தகவலறிந்த பெற்றோர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் ரேவரியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். பின்னர் அந்த வழக்கானது சமத்துவம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அந்த பெண் கொடுத்த தகவலின்படி, அந்த மூவரும் அந்த பெண்ணின் ஊரான  நயா கோன் கிராமத்தை சேர்ந்த பங்கஜ், மனீஷ் மற்றும் நிஷு என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து  சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.  பாதிக்கப்பட்ட பெண் 3 குற்றவாளிகள் குறித்த தகவலை கூறி உள்ளார். தன்னை 8 முதல் 10 பேர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கலாம் என கூறி உள்ளார்.

hariyana girl rapped

இதில் முக்கிய குற்றவாளி  ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் என தெரியவந்து உள்ளது. பங்கஜ் என்ற ராணுவ வீரரின் புகைப்படத்தை அரியானா  போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் மணீஷ் மற்றும் நிஷ்ஷூ என்ற இரு வாலிபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்களின் புகைப்படம் போலீசாரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மூவரையும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அரியானா மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.