முடிக் கொட்டுவதை தடுக்கும் அற்புதப்பழம்.! இத்தனை நாளா தெரியாம இருந்தோமே.?!plums-fruit-benefits

பிளம்ஸ் பழம் கொத்துப்பெரி என்றும் அழைக்கபடுகிறது. இதைப் பெண்களின் பழம் என்றும் சொல்வார்கள். இந்த பழம் மேற்கு ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. மலைப்பகுதிகளில் பிளம்ஸ் பழம் அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.

இது இந்தியாவில், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. மேலும் இந்த பழம் அறிவியல் ரீதியாக ப்ரூனஸ் டொமஸ்டிகா எல் என அழைக்கப்படுகிறது. ப்ளம்ஸ் பழம் ரோசேசி என்ற குடும்பத்தைச் சேர்ந்தப் பழமாகும். அரிய வகையில் கிடைக்கக்கூடிய இந்த ப்ளம்ஸ் பழத்தின் நன்மைகளைப் பற்றி கீழே பார்க்கலாம். 

Plums fruit

இந்த பழம் ஊதா, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வடிவம் ஒரு சிறிய பந்து போன்று, குட்டி ஆப்பிள் சைசில் காணப்படும். இது சுமார் 40 வகைகளை உள்ளடக்கிய ஒரு பழமாகும். இதில் பாலிபினால்கள், கரோட்டினாய்டு கலவைகள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தின் சில முக்கிய வகைகள் என்னவென்றால், ரெட் பியூட்டி, பிளாக் பியூட்டி, சாண்டா ரோசா, பிளாக் ஆம்பர் மற்றும் ஆப்பிரிக்க ரோஸ் போன்றவையாகும்.

பிளவினாய்ட்ஸ் எனும் வேதிப்பொருள் அதிகமாக பிளான்ட்ஸ் பழத்தில் இருப்பதால் இதை சாப்பிட்டு வர, சில நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பிளம்ஸ் பழம் சாப்பிட்டு வர இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. 

Plums fruit

இந்த பழம் முக்கியமாக உடல் எடை குறைப்பவர்களுக்கு அதிகம் பயனுள்ளதாக அமைகிறது. இதில் வைட்டமின் ஏ சத்துக்கள் இருப்பதால் தலைமுடி உதிர்வை தடுத்து, நரைமுடி பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது. அடிக்கடி ப்ளம்ஸ் பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகப் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். தோளில் ஏற்படக்கூடிய தழும்புகள் மற்றும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.

இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. நார்ச்சத்து உள்ள இந்த ப்ளம்ஸ் பழத்தை சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். இதில் உள்ள மெக்னீசியம் தசைகள் மற்றும் நரம்பு செயலாக்கத்தை மேம்படுத்துகிறது.