காலை நேரத்தில் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா.!?



peoples-should-not-eat-these-kind-of-food-at-morning

காலை நேரத்தில் சாப்பிட கூடாத உணவுகள் 

பொதுவாக காலையில் எழுந்தவுடன் பலருக்கும் டீ, காபி, ஸ்னாக்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வது வழக்கமாக இருக்கும். ஆனால் இது உடலில் பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் ஒரு சிலர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பழங்கள், இறைச்சிகள், போன்றவற்றையும் சாப்பிட்டு வருகின்றனர். இது உடலுக்கு நல்லதா என்ற கேள்வியும் இருந்து வருகிறது. எனவே காலை நேரத்தில் என்னென்ன உணவுகள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. இனிப்பு உணவுகள்: அதிகமான சர்க்கரையுள்ள உணவுகள், குறிப்பாக கேக், பிஸ்கட், பிரெட் போன்றவை காலை நேரத்தில் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, உடலை சோர்வடைய செய்யும்.

2. எண்ணெய்யில் பொறித்த உணவுகள் : அதிக எண்ணெயில் பொறித்த உணவுகள் காலை நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால், குடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: கடலை மிட்டாய் அதிகமாக சாப்பிடுவீங்களா.? உங்களுக்கு தான் இந்த பதிவு.!?

foods

3. கார உணவுகள் :  காரம் அதிகமான உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது வயிற்றில் அதிகப்படியான அமிலங்களை உற்பத்தி செய்யும். இதனால் அல்சர், குடல் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

4. காபி மற்றும் தேநீர்: அதிக அளவு காபி அல்லது தேநீர் காலை நேரத்தில் சாப்பிட்டால், இதயத்திற்கு செல்லும் நரம்புகளை தூண்டி, இரத்த ஓட்டத்தை தடை செய்யும். மேலும் செரிமான பாதிப்பு, மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
5. இறைச்சி: காலை நேரத்தில் இறைச்சியை உணவாக எடுத்து கொண்டால் செரிமானம் கடினமாகும். செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கக்கூடும், இதனால் உடல் சோர்வு அடைவதோடு உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

6. சிட்ரஸ் பழங்கள் - சிட்ரஸ் வகை பழங்களான எலுமிச்சை, அன்னாசி ஆரஞ்சு போன்றவற்றை வெறும் வயிற்றில் காலையில் எழுந்தவுடன் சாப்பிடக் கூடாது. இந்த பழங்களில் உள்ள சிட்ரஸ் அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களை அதிகப்படுத்தி வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

7 வாழைப்பழம் - வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் போது ரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவை அதிகரிக்கிறது. இது உடலுக்கு நல்லதல்ல என்பதால் காலையில் எழுந்தவுடன் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.

இதையும் படிங்க: குளிர்கால சளி, காய்ச்சலால் அவதிப்படுறீங்களா.? இந்த கசாயத்தை குடித்து பாருங்க.!?