வயிற்று நச்சுக்களை அகற்றும் வெஜ் ஓட்ஸ் ஊத்தப்பம்.. சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி?.!

வயிற்று நச்சுக்களை அகற்றும் வெஜ் ஓட்ஸ் ஊத்தப்பம்.. சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி?.!


oats-veg-uththapam-recipe-for-stomach-problems

நீரிழிவு நோயை குணப்படுத்தும் சுவையான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் எப்படி சமைப்பது என்பது பற்றியது தான் செய்திக்குறிப்பு.

ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலமாக நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன் வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி மற்றும் ஓட்ஸ் கூழ் ஆகியவற்றை சாப்பிடுவதால் வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
ஓட்ஸ் - 2 கப்
கடலை மாவு - அரை கப்
ரவை - அரை கப்
முட்டைக்கோஸ் - சிறிய துண்டு
கேரட் - 1
குடைமிளகாய் - பாதியளவு
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மோர் - 3 கப்
சீரகம் - 1தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி

Veg

செய்முறை :

★முதலில் முட்டைகோஸ், குடைமிளகாய் இரண்டையும் பொடி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

★அடுத்து கேரட்டை துருவிய பின், ஓட்ஸையும் ரவையையும் ஒன்றாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவேண்டும்.

★கடலைமாவை பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். பின் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை பொடித்துகொள்ள வேண்டும்.

★தொடர்ந்து வறுத்த மாவு கலவைகளை ஒரே பாத்திரத்தில் இட்டு உப்பு போட்டு கலக்க வேண்டும். அதனுடன் சிறிது மோர் சேர்த்து சீரகம், மிளகு மற்றும் பொடித்த முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்

★தொடர்ந்து குடைமிளகாய், முட்டைகோஸ், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை மாவுடன் கலந்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

★இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு திருப்பிப்போட்டு வேக வைத்து பரிமாறினால் சூப்பரான ஒரு ஊத்தப்பம் ரெடியாகிவிடும்.