BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அய்யயோ! பிஞ்சு குழந்தை வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்! அரியலூரில் பரபரப்பு...!
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் பின்புறத்தில் நடந்த துயரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த சில மணி நேரங்களில் ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. அதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து, உடலை வாயில் கவ்விக்கொண்டு தெருவில் ஓடியது.
இந்த நிகழ்வை பார்த்த பொதுமக்கள் நாயை விரட்டினர். அந்த நாய் குழந்தையின் உடலை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டது. உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பல கோணங்களில் விசாரணை
இந்த மர்மமான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, பல கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர். குழந்தை கள்ளக்காதலில் பிறந்ததா, அல்லது பிறந்தவுடன் இறந்ததா என்பதைத் தெளிவுபடுத்த விசாரணை நடந்து வருகிறது. மேலும், குழந்தையை கொலை செய்து வீசியிருக்க வாய்ப்புகள் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தை கலங்க வைத்த புதுப்பெண் ரிதன்யாவின் மரணம்! புது காரில் கடைசியாக சிரித்த முகத்துடன் சென்ற ரிதன்யா! நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..
பொதுமக்களில் அதிர்ச்சி
குழந்தை குப்பைமேட்டில் கிடந்த நிலையில், அதனை தெரு நாய் கவ்விக்கொண்டு சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிரித்து விளையாடிய குழந்தை! சாப்பிட்ட ஒரே பழம்... சில நொடிகளில் நடந்த துயரம்! நெல்லையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்...