பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
2024 ஆம் ஆண்டில் ஜாக்பாட் அடிக்க போகும் அந்த 3 ராசிகள் எது.? லிஸ்டில் உங்க ராசி இருக்கா.?
விரைவில் 2024 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. சற்றேறக்குறைய இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது புத்தாண்டு பிறப்பதற்கு. ஆகவே நாம் அனைவரும் புதிய கனவுகள் மற்றும் லட்சியங்களோடு புத்தாண்டில் விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கின்றோம். இந்த புத்தாண்டில் செல்வ வளம், வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் போன்றவை எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையும் என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரையில், புத்தாண்டு மிக சிறப்பாக இருக்கும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் குரு பகவான் இந்த மேஷ ராசியில் பயணம் செய்து அருள் பாலிக்கவுள்ளார். ஆகவே இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதோடு இழுபறியாக இருந்து வரும் சில காரியங்களும் மிக விரைவாக முடிய வாய்ப்புள்ளது.
மேஷ ராசிக்கார மாணவர்களுக்கு அவர்களுடைய கனவு நிறைவேறும் மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு பயணம் கைகூடுவதற்கான வாய்ப்புள்ளதாக ஜோதிடர்கள் கணித்திருக்கிறார்கள்.சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்வரும் புத்தாண்டு மிக சிறப்பான வருடமாக இருக்கும். இந்த புத்தாண்டில் குரு 9வது இடத்தில் பயணம் செய்கிறார். இதன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்களுக்கு பங்குச்சந்தை மற்றும் லாட்டரி குறித்த வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, இவர்கள் ஆரம்பிக்கும் வியாபாரமும் சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்து குறித்த சிக்கல்கள் வந்தாலும் இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம்.தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்வரும் புத்தாண்டு மிக சிறப்பான வருடமாகவே இருக்கும். எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் திருமணமாகாத தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடந்தேறும்.
குரு பெயர்ச்சி இவர்களுடைய நிதி நிலையை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயமாக கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. நிதிநிலைமை, வேலை மற்றும் ஆரோக்கியம் என்று எல்லாமே தனுசு ராசிக்காரர்களுக்கு மிக அற்புதமாக அமையும் ஒரு வருடமாக 2024 ஆம் ஆண்டு இருக்கும்.