உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சிவப்பு இறைச்சிகளின் இந்த 3 பகுதிகள்! என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீங்க..



mutton-dangerous-parts-heart-risk

அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் பலர் மட்டன் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அடிக்கடி உணவில் சேர்க்கிறார்கள். ஆனால், மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையில் கூறுவது போல, சில வகை இறைச்சிப் பகுதிகள் நமது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடும்.

சிவப்பு இறைச்சியின் சத்துக்கள்

சிவப்பு இறைச்சிகளில் வைட்டமின் பி12, இரும்பு, துத்தநாகம், செலினியம் மற்றும் நியாசின் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தசை வளர்ச்சி, நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த உற்பத்திக்கு உதவுகின்றன. எனினும், எல்லா சிவப்பு இறைச்சிகளும் உடலுக்கு நல்லது அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எந்த இறைச்சியை தவிர்க்க வேண்டும்?

அதிக கொழுப்பு உள்ள உறுப்புகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் அதிக வெப்பத்தில் கிரில் அல்லது பார்பிக்யூ செய்யப்பட்ட இறைச்சிகள் உடல்நலத்திற்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றை சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

இதையும் படிங்க: இந்த மீன்களை சாப்பிட்டால், மரணம் கூட தள்ளிப் போகும்.! ஏன் தெரியுமா.?!

பன்றியின் ஹாம்

பன்றியின் தொடையில் இருந்து வெட்டப்படும் ஹாம், சோடியம் மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இதை அதிகமாக சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

சலாமி

புளிக்கவைக்கப்பட்டு காற்றில் உலர்த்தப்படும் சலாமி, புரதம் நிறைந்திருந்தாலும் அதிக சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை கொண்டுள்ளது. இதை பதப்படுத்தும் போது புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனங்கள் உருவாகின்றன. மேலும், இதில் பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன.

ஆரோக்கிய எச்சரிக்கை

ஒரு நாளுக்கு 50 கிராம் மேல் பன்றி இறைச்சி, ஹாம் அல்லது சலாமி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை 18% அதிகரிக்கிறது என்று மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிவப்பு இறைச்சியில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள், கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தி ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.

மொத்தத்தில், அசைவ உணவை விரும்புவோர் சாப்பிடும் அளவிலும் தேர்விலும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை தவிர்த்தால், இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

 

இதையும் படிங்க: அதிகமாக கோழிக்கறி சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம்! ஆண்களுக்கு 2 மடங்கு ஆபத்து அதிகம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி!