இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து பக்கோடா செய்வது எப்படி.?

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து பக்கோடா செய்வது எப்படி.?



Murungai keerai pakoda recipe

உடலுக்கு பல நன்மைகளையும், கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த மருந்தாகவும், இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 2
சோம்பு - ஒரு டீஸ்பூன்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

Murungai keerai

முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய கலவையுடன் முருங்கைக் கீரை, சோம்பு, உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். அதாவது மாவு உதிரி உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுத்தால் சுவையான முருங்கை கீரை பக்கோடா தயார்.