லைப் ஸ்டைல்

அடேங்கப்பா! அம்பானியின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?

Summary:

Mukesh ambani richest man list overall world

இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. சில நாட்களுக்கு முன்பு இவரது மகள் திருமணம் இந்த உலகமே வியக்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

பெட்ரோல், மருந்து விற்பனை, சூப்பர் மார்க்கெட், துணி உற்பத்தி என பலவிதமான தொழில்களை நடத்தி வருகிறார் முகேஷ் அம்பானி. இதுமட்டும் இல்லாமல் இந்திய வரலாற்றில் தொலை தொடர்பு நிறுவனத்தில் மாபெரும் புரட்சியை ஏற்பட்டுகிய JIO நிறுவனம் முகேஷ் அமபாணியோடதுதான்.

மேலும் 27 மாடி கொண்ட இவரது வீட்டின் மதிப்பு மட்டும் 14 ஆயிரம் கோடியாகும். இது உலகின் காஸ்ட்லியான வீடுகளில் இரண்டாவது இடமாகும். முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்து ராணி வசிக்கும் பக்கிங்காம் அரண்மனையாகும்.

இது போக இவரின் சொத்து மதிப்பு 43.1 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் கோடியாகும். இவர் உலக பணக்காரர்களில் 19வது இடத்தை பிடித்துள்ளார்.


Advertisement