காலையில் இட்லியுடன், வடை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?Morning breakfast idly with vadai

தமிழ்நாட்டின் பிரபலமான உணவு என்றால் அது இட்லி தான். இந்த இட்லி தற்போது பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக இட்லியுடன், உளுந்த வடை சாப்பிடுவது வழக்கமாகி வருகிறது. எனவே இட்லியுடன், உளுந்த வடை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Breakfast

இட்லி பொதுவாக அரிசி மற்றும் உளுந்து கலவை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி ஒரு கொழுப்பு குறைவான உணவு இதில் நார் சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. ஆனால் வடை எண்ணெயில் பொறிக்கப்படுவதால் அதிக கலோரிகளை கொண்டுள்ளது.

அதேபோல் உளுந்த வடையில் கொழுப்பு அதிகம் இருக்கும். எனது வடை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இட்லி மற்றும் வடை சேர்த்து அளவோடு சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

Breakfast

அதிலும் குறிப்பாக வீட்டிலேயே செய்யப்படும் இட்லி மற்றும் வடை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஏனென்றால் கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் எவ்வளவு சுத்தமானதாக இருக்கும் என தெரியாது.