
குஜராத் மாநிலம் அகமதாபாத் குடும்ப நீதிமன்றத்தில் ஒருவர் தன் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் விவாகரத்துக்காக கூறிய காரணங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அவர் தன் மனைவியின் குரல் ஆண் போல இருப்பதாகவும், மனைவி தாடி வைத்திருப்பதாவும் கூறி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், சம்பிரதாயத்துக்கு எதிரானது என்பதால் திருமணத்துக்கு முன் தான் அவரைப் பார்க்கவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவர் கூறியிருக்கும் காரணங்களால் விவாகரத்து அளிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அவரது மனைவி, “அவர் தன்னை வீட்டிலிருந்து எப்படியாவது துரத்திவிட வேண்டும் என்று பொய்யாக குற்றம்சாட்டுகிறார். முகத்தில் முடி வளர்வது ஹார்மோன் சமநிலை இல்லாத காரணத்தால் தான் . அதை சிகிச்சை மூலம் சரிசெய்துகொள்ளலாம்.” என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement