"அன்று போல் இன்றும் உல்லாசமாய் இருக்கலாம் வா.." என அழைத்த காதலன்; மறுத்த காதலிக்கு நிகழ்ந்த கொடூரம்!
"அன்று போல் இன்றும் உல்லாசமாய் இருக்கலாம் வா.." என அழைத்த காதலன்; மறுத்த காதலிக்கு நிகழ்ந்த கொடூரம்!

வீட்டில் யாரும் இல்லாததால் காதலியை உல்லாசமாக இருக்க காதலன் அழைக்க, அதற்கு மறுப்பு தெரிவித்த காதலியை சராமாரியாக தாக்கிய சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி அடுத்த உள்ளிருப்பு காலனியை சேர்ந்தவர்கள் 22 வயதான சுரேஷ்பாபு மற்றும் 19 வயதான சுமித்ரா. இவர்கள் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களுடைய காதல் வெறும் பேச்சோடும், பார்வையோடும் நின்றுவிடவில்லை. அதனையும் தாண்டி பலமுறை இருவரும் உறவு கொள்ளும் அளவிற்கு ஆழமான காதலாக இருந்துள்ளது.
எப்பொழுதெல்லாம் தனியாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அதனை அவர்கள் தவறவிட்டது இல்லையாம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஊர் சுற்றுவதும் உல்லாசமாக இருப்பது என ஜாலியாக இருந்துவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ்பாபு வீட்டில் இருந்தவர்கள் உறவினர் வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கு சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுமித்ராவுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று எண்ணிய சுரேஷ்பாபு அவர்களுடன் செல்லாமல் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
இதற்கான திட்டத்தை சுரேஷ்பாபு ஏற்கனவே சுமித்ராவிடம் கூறியுள்ளார். சுமித்ராவும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சுரேஷ்பாபு காத்திருந்த அந்த நாள் வந்தது. அவரது குடும்பத்தினர் அனைவரும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இதனால் சுரேஷ்பாபு, சுமித்ராவிடம் சென்று, "எங்களது வீட்டில் யாரும் இல்லை.. நீ என் வீட்டுக்குவா.. நாம் உல்லாசமாக இருக்கலாம்" என கூப்பிட்டுள்ளார். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக சுமித்ரா அவருடன் செல்ல மறுத்துள்ளார்.
சுரேஷ்பாபு மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கேட்கவே சுமித்ரா உடன்படவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் பாபு நேற்று இரவு சுமித்ராவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே வீட்டில் தனியாக இருந்த சுமித்ராவை பலமாக தாக்க தொடங்கினார். இதில் நிலை தடுமாறி விழுந்த சுமித்ராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சுமித்ரா நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சுரேஷ் பாபுவை கைது செய்தனர்.