லைப் ஸ்டைல்

சீறிய சிறுத்தை..! சுற்றிவளைத்து விழுங்க நினைத்த மலைப்பாம்பு..! தெறிக்கவிடும் விடும் சண்டை காட்சி.!

Summary:

Leopard and Python squaring upto each other video goes viral

பொதுவாக காட்டு விலங்குகள் இடையே சண்டை நடப்பது வழக்கமான ஓன்று. அந்த சண்டை பெரும்பாலும் உணவுக்காகவே இருக்கும். சில நேரங்களில் சில வினோதமான சண்டைகளும் நடைபெறும்.

அந்த வகையில் மலைப்பாம்பும், சிறுத்தையும் சண்டை போடும் வீடியோ ஒன்றை இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 46 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் மலைப்பாம்பும், சிறுத்தையும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்கிறது.

சிறுத்தையை பார்த்ததும் தனது வழக்கமான தந்திரத்தை பயன்படுத்தி பாம்பு சிறுத்தையை சுற்றி வளைக்கிறது. ஆனால், பாம்பின் பிடியில் இருந்து சிறுத்தை மீண்டும் மீண்டும் தப்பித்து அங்கிருந்து நகர்கிறது.

இறுதியாக சிறுத்தையை உணவாக்க நினைத்த மலைப்பாம்பு சிறுத்தையிடம் தோற்று சிறுத்தைக்கு உணவானதாக அந்த பதிவில் சுசந்தா நந்தா கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement