இந்த பொருட்களை எல்லாம் நீண்ட நாட்கள் உபயோகிக்காதீர்கள்" என்னென்ன தெரியுமா.?

இந்த பொருட்களை எல்லாம் நீண்ட நாட்கள் உபயோகிக்காதீர்கள்" என்னென்ன தெரியுமா.?



Latest news about lifestyle

பெரும்பாலும் நாம் தினமும் நம் வாழ்வில் உபயோகப்படுத்தும் பொருட்களை எப்போது மாற்ற வேண்டும் என்பது தெரியாமல் தொடர்ந்து உபயோகப்படுத்தி வருவோம். பெரும்பாலான பொருட்களுக்கு காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் சில பொருட்களுக்கு காலாவதி தேதி இருக்காது.

Lifestyle

அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம். தினமும் நாம் பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ்ஷை 3மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். நாம் அணியும் காலணிகளை அதிகபட்சம் 1 முதல் 2 வருடங்களில் மாற்ற வேண்டும். பெண்கள் உபயோகிக்கும் ஸ்டிக்கர் பொட்டை தினமும் மாற்ற வேண்டும்.

சுவரில் ஒட்டிவைத்து பிறகு அதை நெற்றியில் ஒட்டும்போது சருமம் பாதிக்கப்படும். அதேபோல் தினமும் உபயோகிக்கும் உள்ளாடைகளை 8 முதல் 9 மாதங்களில் மாற்றிவிட வேண்டும். பெண்கள் உபயோகிக்கும் சானிட்டரி நாப்கின் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும்.

Lifestyle

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை ஒருமுறை உபயோகித்து விட்டு நசுக்கி எறிந்துவிடவேண்டும். மேலும் இட்லி மாவை 3 நாட்களுக்கு மேல் உபயோகப்படுத்த கூடாது. காய்கறிகள், கீரைகளை வாங்கி வந்த அன்றே சமைத்து விடவேண்டும். பாத்திரம் தேய்க்கும் ப்ரஷ் 15நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.