பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதானால் உடலில் உண்டாகும் பக்கவிளைவுகள்! இவர்களாம் இதை குடிக்கவே கூடாதாம்!

வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதில் உள்ள பக்கவிளைவுகள்
வெண்டைக்காய் என்பது இந்தியர்களின் உணவில் அடிக்கடி இடம் பெறும் முக்கியமான காய்கறியாகும். இதில் உள்ள நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், மெக்னீசியம், மற்றும் வைட்டமின் K போன்ற ஊட்டச்சத்துக்கள் மனித உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன.
வெண்டைக்காய் தண்ணீர் என்பது உடல் ஆரோக்கியத்திற்காக பரிந்துரைக்கப்படும் ஒரு இயற்கை முறை. ஆனால், இதனை தவறான முறையில் எடுத்துக் கொண்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். அந்த விவரங்களை இங்கு பார்ப்போம்.
இதையும் படிங்க: உங்கள் விரல் வடிவம் நேரான, கூர், முறுக்கி விரல்களா.. இதில் எப்படிப்பட்டது? அதை பொறுத்து உங்கள் வாழ்க்கையை தெரிந்து கொள்ளலாம்!
செரிமானத்துக்கு ஏற்படும் சிக்கல்கள்
வெண்டைக்காய் தண்ணீரில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சிலருக்கு வாயு, வயிறு வலி, மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
செரிமானம் பலவீனமாக உள்ளவர்கள் இதனை நன்கு ஆலோசனை பெற்ற பிறகே எடுக்க வேண்டும்.
ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் கவனம் அவசியம்
அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் நீரை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள பிரக்டான்ஸ் எனப்படும் இயற்கை சக்கரை வகை, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் அபாயம்
வெண்டைக்காயில் காணப்படும் அக்சலேட்டுகள், நீண்ட நாட்கள் தொடர்ந்து எடுத்தால் சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
ஆரம்ப நிலை பயன்படுத்தும் போது எச்சரிக்கை
வெண்டைக்காய் நீரை முதன்முறையாக பயன்படுத்தும் போது, சிறிய அளவில் மட்டுமே பருக வேண்டும். ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இதையும் படிங்க: நீங்கள் இந்த படத்தில் முதலில் என்ன பார்க்கிறீர்கள்? அதை பொறுத்து உங்கள் வாழ்க்கையின் ஆளுமையை அறிந்து கொள்ளளாம்!