மஞ்சள் உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா.. வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்த மாதிரி வெண்டைக்காய் பொரியல் செஞ்சா., பிடிக்காதவங்க கூட ருசிச்சு சாப்பிடுவாங்க.!
இந்த மாதிரி வெண்டைக்காய் பொரியல் செஞ்சா., பிடிக்காதவங்க கூட ருசிச்சு சாப்பிடுவாங்க.!

தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 1 கப்
மிளகாய் வத்தல் - 2
வறுத்த வேர்கடலை - அரை கப்
சீரகம் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், கடுகு, உப்பு - தேவையான அளவு
பூண்டு - 4 பல்
வெங்காயம் - அரை
கருவேப்பிலை
மிளகாய் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி - தலா 1/2 ஸ்பூன்
செய்முறை :
நீள நீளமாக வெண்டைக்காய்யை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வத்தல், வேர்கடலை மற்றும் சீரகம் ஆகியவற்றை பொடியாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய், கடுகு, பூண்டு, வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய வெண்டைக்காய்யை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின்னர் அதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, உப்பு போட்டு நன்றாக கிளறி எடுத்து பறிமாறவும்.