பாத்திரத்தில் படிந்துள்ள விடாப்பிடியான கரை போகவேண்டுமா?.. எளிதில் நீக்க அசத்தலான டிப்ஸ் இதோ..!!

பாத்திரத்தில் படிந்துள்ள விடாப்பிடியான கரை போகவேண்டுமா?.. எளிதில் நீக்க அசத்தலான டிப்ஸ் இதோ..!!



kitchen-tips-tamil-today

 

நமது சமையல் அறையில் உள்ள பாத்திரங்கள் கரை படிந்திருக்கும். இந்த கரைகளை நீக்குவதற்கு உள்ள எளிய முறைகள் குறித்த தகவலை காணலாம். கரை உள்ள பாத்திரத்தில் ஒயின் ஊற்றி பின் அதனை சோப் வைத்து தேய்க்கலாம். 

வெண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து பின்னர் சோப்பு வைத்து தேய்த்தால் கரைகள் பாத்திரத்தில் இருந்து சென்றுவிடும். வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சீடார் வினிகரை பயன்படுத்தி கருகிய பாத்திரத்தை இரவு ஊறவைக்க பின் சுத்தம் செய்தால் பாத்திரம் பளபளப்பாகும். 

பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து கறைபடிந்த பாத்திரத்தை அதில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து தேய்த்தால் கரை சென்றுவிடும். நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து புளிகரைசல் தயார் செய்து, எலுமிச்சை சாறு கலந்து பாத்திரத்தை கழுவலாம்.