குட்டீஸ் விரும்பும் சுவையான கேரட் பட்டாணி சாதம் செய்வது எப்படி.? சிம்பிள் ரெசிபி இதோ.!



kids-favourite-carrot-green-peas-rice-recipe

வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான லஞ்ச் செய்து போர் அடிக்குதா.? இனி காலையில் இந்த கேரட் பட்டாணி சாதத்தை செய்து ஸ்கூலுக்கு கொடுங்க. இது குழந்தைகளுக்கான சாதம் இது ஈசியாக செய்யக்கூடிய ரைஸ் . குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். வாங்க ஈஸியா அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
   
தேவையான பொருட்கள்: 1 கப் அரிசி, 1/2 கப் மஞ்சள், பட்டாணி, 100 கி கேரட் , 2 பெரிய வெங்காயம், 5 தக்காளி, 2 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் சோம்பு, உப்பு தேவையான அளவு, நல்லெண்ணெய் தேவையான அளவு, 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சிறிதளவு

Healthy Foodசெய்முறை: முதலில் அரிசியை நன்கு கழுவி விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும். பட்டாணியை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை, புதினா சேர்த்து வதக்கவும்.  பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

Healthy Foodஇதன் பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்‌. தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், பிரியாணி தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் ஊறவைத்த பட்டாணி, நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். பின் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடிந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கேரட் பட்டாணி சாதம் ரெடி.