தினமும் காலையில் ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?

தினமும் காலையில் ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?


jaggery-health-benefits

வெல்லத்தில் அதிகப்படியான இரும்பு சத்து உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒரு இனிப்பு உணவாக வெல்லம் கருதப்படுகிறது. அதிலும் பெண்கள் வெல்லத்தை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

தினமும் காலையில் வெல்லம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப்படுத்த தினமும் காலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும் உடல் புத்துணர்ச்சி பெறும்.

health tips

வெல்லத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடிய ஆற்றல் வெல்லத்தில் காணப்படுகிறது. அதனால்தான் ஒரு சிலர் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லத்தை சாப்பிடுகின்றனர். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.

வெல்லம் சாப்பிடுவதால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.

பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட அந்த பிரச்சனை சரியாகும்.