முடி அதிகமா கொட்டுதா.?! பலாப்பழ கொட்டையில் தீர்வு இதோ.! 

முடி அதிகமா கொட்டுதா.?! பலாப்பழ கொட்டையில் தீர்வு இதோ.! 



jackfruit-nut-solution-for-hair-damage

கோடை காலத்தில் சற்று விலை மலிவாக கிடைக்கக்கூடிய பலாப்பழம் மிகவும் சுவை மிக்கது. இந்த சுவைமிக்க பலாப்பழ கொட்டையை பலரும் தூக்கி வீசி விடுகின்றனர். ஆனால் நாம் தூக்கி வீசும் இந்த பலாப்பழக் கொட்டையில் இருக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இது பல நோய்களுக்கும் தடுப்பு மருந்தாக உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த கொட்டையை சாப்பிடுவது நல்லது. இப்படி செய்தால் வயிற்றில் இருக்கும் வாயு விரைவில் வெளியேறி வயிறு சுத்தமாகும். 

health tips

இந்த பலாப்பழக்கோட்டையை நெருப்பில் போட்டு சுட்டு சாப்பிடலாம். பார்வை திறன் சற்று பாதிக்கப்பட்டதை போல உணரும்போது அல்லது பார்வை மங்கியதைப் போல தோன்றும் போது பலாப்பழக்கொட்டையை நாம் சாப்பிட்டால் அது கண் பார்வையை மேம்படுத்துகிறது. இதன் மூலம், மாகுலர் சிதைவு மற்றும் கண் புரை போன்ற பல நோய்களையும் தடுக்கலாம். இந்த பலாப்பழ கொட்டையில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. எனவே, இது மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. இதனால் செரிமான மண்டலம் மேம்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

health tips

முடி கொட்டும் பிரச்சினை இருப்பவர்கள் இந்த கொட்டையை எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள விட்டமின் ஏ முடி உதிர்வை தடுக்கிறது. இதில் இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவை இருப்பதால் இது ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சிலருக்கு வயது குறைவாக இருந்தாலும் வயதான தோற்றம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த கொட்டையை சாப்பிடும் போது ஆக்ஸிஜனேற்ற பண்புகளினால் சரும சுருக்கம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. காய்ச்சி ஆற வைத்த பாலுடன் பலாப்பழ கொட்டைகளை அரைத்து முகத்தில் ஃபேஸ் பேக் போடுவதால் முகப்பொலிவு ஏற்படும்.

குறிப்பு : சர்க்கரை வியாதி இருப்பவர்கள் பலாப்பழக்கோட்டையை சாப்பிடுவதற்கு முன்பு உங்களது டாக்டரிடம் பரிந்துரை பெறுவது நல்லது.