கழுத்தை சுற்றி காணப்படும் கருமையை போக்க அருமையான டிப்ஸ்... டிரை பண்ணி பாருங்க அசந்துபோயிடுவீங்க..!!

கழுத்தை சுற்றி காணப்படும் கருமையை போக்க அருமையான டிப்ஸ்... டிரை பண்ணி பாருங்க அசந்துபோயிடுவீங்க..!!


how to remove backneck tan

உடல் வெப்பம், நகை அணிவது மற்றும் ஒவ்வாமை காரணமாக கழுத்தை சுற்றி காணப்படும் கருமை நிறத்தை நீக்கும் வழி குறித்து காணலாம்.

பொதுவாக பெண்களுக்கு நகை அணிவது, ஒவ்வாமை மற்றும் உடல் வெப்பத்தின் காரணமாக கழுத்தை சுற்றி கருமை நிறம் காணப்படும். இதனை எவ்வாறு சரி செய்வது என்று பல வழிகளையும் யோசித்து வருவார்கள். கருமை நிறத்தை போக்குவதற்கு எளிய வீட்டு உபயோகப் பொருட்களையே பயன்படுத்தலாம்.

தினமும் உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, தயிருடன் சேர்த்து கழுத்தை சுற்றி தேய்த்து வந்தால் கருமையை எளிதில் போக்கிவிடலாம். சிறிதளவு தயிருடன் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கழுத்தை சுற்றி தடவி வரலாம். பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால் கழுத்தை சுற்றி காணப்படும் கருமை எளிதில் சரியாகிவிடும்.

beauty

மேலும், 2 தேக்கரண்டி கடலை மாவுடன், அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு, அரை தேக்கரண்டி மஞ்சள் ஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கழுத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நேரில் கழுவினால் கருமை நீங்க தொடங்கிவிடும்.

ஆப்பிள் சிடேர் வினிகரையும் கருமையை நீக்க பயன்படுத்தலாம். ஆப்பிள் சிடேர் வினிகருடன், நான்கு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து பஞ்சில் நனைத்து கழுதை சுற்றி தேய்த்து வந்தால் கருமை நீங்கிவிடும். பேக்கிங் சோடாவையும் தண்ணீரில் கலந்து முகத்தில் செய்து கழுத்தில் தடவி, குளிர்ந்த நேரில் கழுவலாம்.