ஹெல்த்தியான வாழைப்பூ பஜ்ஜி செய்வது எப்படி?.. சுடசுட செய்து அசத்துங்கள்..!!

ஹெல்த்தியான வாழைப்பூ பஜ்ஜி செய்வது எப்படி?.. சுடசுட செய்து அசத்துங்கள்..!!



how-to-prepare-vazhaipoo-bujji

வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் வாழைப்பூவை வைத்து இன்று வாழைப்பூ பஜ்ஜி செய்வது எப்படி என காணலாம். 

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - ஒரு கிண்ணம் (பூவின் நரம்பை நீக்கிவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்)
கடலை மாவு - இரண்டு கிண்ணம் அரிசி மாவு - எட்டு தேக்கரண்டி மிளகாய்த்தூள் - இரண்டு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 5 டீஸ்பூன்
மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா 2 சிட்டிகை
சோளமாவு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

★ முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சோளமாவு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

★பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வாழைப்பூவை ஒவ்வொன்றாக எடுத்து விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தால் சுவையான வாழைப்பூ பஜ்ஜி தயார்.