மணக்க மணக்க சுவையான ரசம் வைப்பது எப்படி?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!

மணக்க மணக்க சுவையான ரசம் வைப்பது எப்படி?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!


How to Prepare Rasam Tamil

இன்று வீட்டிலேயே சுவையான ரசம் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.

மழைக்காலங்களில் எப்போதும் நமது உடல்நிலை என்பது மோசமான நிலைக்கு செல்லும். ஏனெனில் குளிர் போன்ற பல காரணிகளால் சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவ்வாறான தருணத்தில் நமக்கு காய்ச்சல் என்பது பேருதவி செய்யும். இன்று சுவையான ரசம் செய்வது எப்படி என காணலாம்.

தேவையான பொருட்கள்: 
மிளகு - ஒரு ஸ்பூன்,
சீரகம் - ஒன்றை ஸ்பூன், 
பூண்டு - பத்து பல், 
பெருங்காயம் - சிறிதளவு, 
உப்பு - தேவையான அளவு, 
புளி - எலுமிச்சம் பழம் அளவு,
கொத்தமல்லி, கறிவேப்பில்லை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 4, 
பச்சை மிளகாய் - ஆறு, 
எண்ணெய் - தேவையான அளவு,
தக்காளி - நன்றாக பழுத்தது நான்கு...

செய்முறை: 
முதலில் மிளகு, சீரகம் சிறிதளவு வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

பின்பு இதனுடன் பூண்டை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழ அளவு எடுத்த புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும். 

அதில் உப்பு, தேவையான அளவு மஞ்சள் தூள், தக்காளி நன்றாக பழுத்தது, நான்கு பச்சை மிளகாய், இரண்டு கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி அரை கைப்பிடி போட்டு நன்றாக பிசையவும்.

பிறகு வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு, கடுகு வெடித்ததும் இரண்டு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் 4 போட்டு வதக்கவும்.

அதனுடன் கொத்தமல்லி, சிறிதளவு பெருங்காயத்தூள், நாம் அரைத்து வைத்த மிளகு - சீரக பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி, அதனுடன் நாம் பாத்திரத்தில் பிசைந்து வைத்த புளிக் கரைசலையில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்கவும்.

மேலே நுரை வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு கொத்தமல்லி எடுத்து சிறிதளவு மேலே தூவி விட்டு, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி இறக்கி வைக்கவும். இப்பொழுது சூடான சுவையான மணக்க மணக்க ரசம் தயார். இதற்கு எள்ளு துவையல், தேங்காய் துவையல் உருளைக்கிழங்கு பொரியல், ஆம்லேட் போன்றவற்றை வைத்து சாப்பிடலாம்.