பசியை தூண்டும் பிரண்டை துவையல்.. 10 நிமிடத்தில் வீட்டிலேயே செய்வது எப்படி?.!!How To Prepare Pirandai Thuvaiyal

பசியை தூண்டும் பிரண்டை துவையல் எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

பிரண்டை உண்பதன் மூலம் பசியை தூண்டலாம். அத்துடன் உடலை தேற்றவும், மந்தம், அஜீரணம் போன்றவற்றை குணமாகவும் பிரண்டை உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய் - 6 
புளி - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப நல்லெண்ணெய் - தேவைக்கு ஏற்ப பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி தேங்காய் - 1 துண்டு 
பூண்டு பல் - 10
உளுத்தம் பருப்பு - 2 
பிரண்டை - 1 கட்டு

செய்முறை :

★முதலில் பிரண்டையின் மேல் உள்ள தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

★அடுத்து தேங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

★ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

★அடுத்து அதில் இஞ்சி, புளி, பூண்டு மற்றும் தேங்காய்துண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

★பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

★வதங்கியதும் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்தால், பிரண்டை துவையல் தயாராகிவிடும்.