வெயிலின் தாக்கத்தை குறைக்கும் முலாம்பழ ஜூஸ்.. வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?.!

வெயிலின் தாக்கத்தை குறைக்கும் முலாம்பழ ஜூஸ்.. வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?.!



How to Prepare Mulampazha Juice 

 

கோடையில் நமக்கு கிடைக்கும் பழங்கள் கொண்டே, கோடையின் தாக்கம் தெரியாமல் நாம் இருக்கலாம். இன்று முலாம் பழம் சாறு செய்வது குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள்:
முலாம் பழம் - 1,
எலுமிச்சை சாறு - 1 கரண்டி,
தண்ணீர் - 1 கிண்ணம்,
சர்க்கரை - அரை கிண்ணம்,
ஐஸ் கட்டி - 10.

செய்முறை: 
முதலில் எடுத்துவந்த முலாம் பழத்தை நீரில் சுத்தம் செய்து, அதன் மீதுள்ள தோல் மற்றும் விதைகளை நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.  

பின் சர்க்கரையை சிறிதளவு நீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி ஆற வைக்க வேண்டும். இறுதியாக நறுக்கிய முலாம் பழம், எலுமிச்சை சாறு, சர்க்கரை பாகு ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து அரைத்து, அதன் மீது தேன் ஊற்றி குடிக்கலாம்.