கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றும் ஆப்பிள், வாழை, கீவி சாலட்.. வீட்டிலேயே செய்து பலன் பெறுவது எப்படி?..!

கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றும் ஆப்பிள், வாழை, கீவி சாலட்.. வீட்டிலேயே செய்து பலன் பெறுவது எப்படி?..!



How to Prepare Apple Banana Keevi Fruit Salad

கிவி, வாழைப்பழம், ஆப்பிள் வைத்து சாலட் எப்படி செய்வது என்பது குறித்து தற்போது காண்போம்.

கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் நீங்கவும், கல்லீரல் பலம் பெறவும் கிவி பழம் உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வாழைப்பழம் உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 6
தேன் - ஒரு தேக்கரண்டி
புதினா - சிறிதளவு
முந்திரி - 6
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - ஒரு தேக்கரண்டி
கிவி பழம் - இரண்டு
ஆப்பிள் - 1
வாழைப்பழம் - 1
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி

செய்முறை :

★முதலில் ஆப்பிள், கிவி மற்றும் வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும்.

★பின் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டவும்.

★அடுத்து புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முந்திரியை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

★பின் ஒரு பாத்திரத்தில் வெட்டிய வாழைப்பழம், ஆப்பிள், கிவி, சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு கலக்க வேண்டும்.

★அதனுடன் நறுக்கிய புதினா, மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலக்க வேண்டும்.

★இறுதியாக பரிமாறும்போது கொரகொரப்பாக பொடித்து வைத்த முந்திரியை தூவி பரிமாறினால் சாலட் தயாராகிவிடும்.