கோதுமையும் ரவையும் இருந்தால் போதும்.! சூப்பரான இந்த ரெசிப்பியை செய்து விடலாம்.!



how-to-make-delicious-wheat-dosa

கோதுமையையும்,ரவையையும்  சில மணி நேரம் புளிக்க வைத்து, தோசை செய்தால் போதும், இதன் சுவை அருமையாக இருக்கும். 


தேவையான பொருட்கள் :

பச்சை வெங்காயம்

கொத்தமல்லி

சாம்பார் மசாலா

சமையல் சோடா அல்லது பழ உப்பு - 1\4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1 கப்

கோதுமை - 1\4 கப்

ரவை - 1  கப்

தயிர் - 1\2 கப்

Kothumai

செய்முறை :

உப்பு, தண்ணீர், தயிர், கோதுமை, மாவு, ரவை போன்றவற்றை ஒன்றாக சேர்த்து  கலக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அதன் தன்மையை பொறுத்து, தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.

Kothumai

அதன் பிறகு, பேக்கிங் சோடா அல்லது பழ உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் மாவை 6 மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, இயற்கையான முறையில் புளிக்க வைக்க வேண்டும். பின்னர் சூடான நெய் தடவிய பாத்திரம் ஒன்றில் மாவையெடுத்து ஊற்றி தோசையை செய்யலாம். அதன் மீது சிறிதளவு கொத்தமல்லி, சாம்பார் மசாலா, பச்சை வெங்காயம் ஆகியவற்றை தூவி எடுத்தால், சுவையான தோசை தயாராகிவிடும்.