வழுக்கை தலை கூச்சமா? அச்சமா?.. இனி கவலை வேண்டாம்... அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!

வழுக்கை தலை கூச்சமா? அச்சமா?.. இனி கவலை வேண்டாம்... அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!



How to Cure Hair Fall Issue 

 

இன்றளவில் ஒருவரை பார்த்ததும் வசீகர தோற்றத்தை வெளிப்படுத்த தலைமுடி, முக பாவனை போன்றவை பிரதானமாக இருக்கிறது. ஆண்களுக்கும் - பெண்களுக்கும் தலையில் உள்ள முடி என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. சிலருக்கு முடி உதிர்வது தொடர்கதையாக இருக்கும். 

அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனை கவலையை தரும். வெளியில் சென்று வேலை பார்ப்போரின் தலையில் தூசுகள் படிந்து முடி எளிதில் பாதிப்படையும். இதனால் வழுக்கை போன்ற பிரச்சனையும் உண்டாகும். முடி உதிர்தல், வழுக்கை உள்ள இடங்களில் உரோமம் வளர இயற்கையான வைத்தியம் குறித்து இன்று காணலாம்.

கரிசலாங்கண்ணி: மூலிகைகளின் அரசன் என்று போற்றப்படும் கரிசலாங்கண்ணி பவுடரை 5 ஸ்பூன் அளவு எடுத்து, கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்க்க வேண்டும். அதன்பின் முடியை அலசி குளிக்கலாம். இந்த முறையை வாரம் 3 முறை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். 

அஸ்வகந்தா: தன்னகத்தே பல நன்மைகள் கொண்டுள்ள அஸ்வகந்தா, ஹார்மோன் பிரச்சனை காரணமாக முடி உதிருவோருக்கு நல்ல தீர்வு தரும். 3 ஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 3 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் எடுத்து நீர் சேர்த்து கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யலாம். பின் 30 நிமிடம் கழித்து தலையை அலசி குளிக்கலாம். வாரம் 3 முறை இவ்வாறானதை மேற்கொள்ளலாம். 

வெந்தயம்: வெந்தயத்தில் உள்ள புரதம் முடியின் வளர்ச்சிக்கு உதவும். ஹார்மோனையும் சமநிலையில் வைக்க உதவும். 3 ஸ்பூன் வெந்தய பொடியுடன் பாலை கலந்து, இதனை வாரம் 1 முதல் 2 முறை தலையில் தேய்த்து குளித்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும். 

நெல்லிக்காய்: ஆயுர்வேத மருந்தான நெல்லிக்காய் பலவித நோய்களை தீர்க்கும். 5 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை நீரில் சேர்த்து பேஸ்ட் போல கரைத்து, வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வர முடி வளரும். புதிய செல்கள் உற்பத்தி செய்யப்படும். 

வேப்பிலை: வீரியம் கொண்ட மூலிகையாக கருதப்படும் வேப்பிலை கிருமி நாசினி ஆகும். இதனை அவ்வப்போது அரைத்து தலையில் தேய்த்து வர இரத்த ஓட்டம் அதிகமாகும். பேன், பொடுகு போன்றவையும் நீங்கும். கையளவு வேப்பிலை எடுத்து 2 கிண்ணம் நீரில் 15 நிமிடம் கொதிக்கவைத்து அந்நீரை வடிகட்டி தலையை அலசி வர நல்ல பலன் கிடைக்கும். 

தலைக்கு தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை தலா ஒரு ஸ்பூன் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்கவிட்டு அது குளிர்ந்ததும் தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால் முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும்.