லைப் ஸ்டைல்

அப்பாவி கிராமத்து பெண்களின் வறுமையை பயன்படுத்தி பணம் படைத்த முதலாளிகள் செய்யும் கேவலமான செயல்.அதிரவைக்கும் கிராமம்!

Summary:

heartless heads

பெண்களின் வறுமையை பயன்படுத்தி,  வேலை வாங்கும் சில   இரக்கமற்ற  முதலாளிகள் :
மகாராஷ்டிராவில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் கருப்பையை நீக்கினால் தான் வேலை தரப்படும் என, முதலாளிகள் கூறுவதால் சில பெண்கள் தங்களுடைய வறுமைக்காக கருப்பையை அகற்றும் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதனால் அந்த கிராமத்தில் வாழும் பாதி பெண்களுக்கு கருப்பை இல்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

கரும்பு பயிரிடுதல் மற்றும் அறுவடை செய்தல் க்கான பட முடிவு

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள,  பஞ்சவடி என்ற கிராமத்தில் தான் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. அங்கு வசிக்கும் பெரும்பாலானோரின் பிரதான வேலை, கரும்பு பயிரிடுதல் மற்றும் அறுவடை செய்தல்.

கரும்புத் தோட்டத்திற்கு, வேலை செல்லும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஓய்வெடுப்பார்கள், சோர்வாக காணப்படுவார்கள் என்கிற காரணத்தால்,  கரும்பு தோட்டத்தில் வேலை வேண்டும் என்றால் கருப்பையை அகற்றி கொள்ளவேண்டும் என்று, அந்த ஊரில் உள்ள பணம் படைத்த முதலாளிகள் அழிச்சாட்டியம் செய்து வருகிறார்கள்.

இந்த கிராமத்துப் பெண்களும் தங்களுடைய வறுமையை நினைத்து, இவர்கள் போடும் கட்டளைக்கு உடன்படுகிறார்கள். ஆனால் இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் கூட, புகார் தெரிவிக்க முன்வருவதில்லை.  காரணம் அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும் என்பது தான்.  இதுகுறித்து தற்போது  வெளியான தகவலைத் தொடர்ந்து,  இந்த கிராமத்து மக்களை ஆட்டிப் படைக்கும் சிலர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
 


Advertisement