காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு!Health problems of avoid breakfast

நம் வாழ்வின் தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக வாழவும் அத்தியாவசியமான ஒரு அம்சம் சரிவிகித உணவு முறையாகும். அதிலும் குறிப்பாக நாம் நாளை தொடங்குவதற்கான ஆற்றலையும், ஊட்டத்தையும் வழங்கும் காலை உணவு மிகவும் முக்கியமாகும்.

காலை உணவை தவிர்க்காமல் கட்டாயம் சாப்பிட வேண்டும். எனவே காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Breakfast

காலை உணவை தவிர்ப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இதனால் மூளைக்கு தேவையான குளுக்கோஸின் அளவையும் பாதித்து, நாள் முழுவதும் சோர்வு மற்றும் மந்த நிலை போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

காலை உணவை தவிர்த்து விட்டு நீண்ட நேரத்திற்கு பிறகு அடுத்த வேலை உணவை சாப்பிடும் போது, கட்டுப்பற்ற உணவு உட்கொள்ளுவதற்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் தேவையற்ற கலோரிகள் சேர்வதற்கும், உடல் எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

Breakfast

காலை உணவு உடலின் வளர்ச்சிட மாற்றத்தை துவங்கி வைக்கிறது. பல மணி நேர இரவு தூக்கத்திற்கு பிறகு வளர்ச்சிதை மாற்றம் மந்தமாக இருக்கும். காலை உணவு சாப்பிட்ட பிறகு வளர்ச்சியை மாற்றத்தை சீர்படுத்தி, உடல் செயல்பாடுகளை திறம்பட செய்ய தயார் படுத்துகிறது. இதில் காலை உணவை தவிர்க்கும் போது வளர்ச்சிதை மாற்ற விகிதம் குறைகிறது.

குறிப்பாக நீண்ட நாட்களாக காலை உணவை தவிர்த்து வருபவர்களுக்கு இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.