"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
அதிகம் கரும்பு ஜூஸ் குடிப்பதனால் என்ன ஆகும் தெரியுமா? முழு விவரம் இதோ!
கரும்பு, கரும்பு ஜூஸ் பிடிக்காதவர்கள் யார்தான் இருப்பார்கள். வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு ஒரு டம்பளர் கரும்பு ஜூஸ் குடிக்கும்போது உடலுடன் சேர்ந்து மனமும் குளிர்ச்சி அடையும். வெயில் காலங்களில் பெரும்பாலான இடங்களில் கரும்பு ஜூஸ் கிடைப்பதை நாம் பார்திரும்போம். இந்த கரும்பு ஜூஸினால் என்னெல்லாம் நன்மை கிடைக்கிது? வாங்க பாக்கலாம்.
கரும்பு ஜூஸானது இயற்கையான சர்க்கரை, ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட்டை அதிகமாகக் கொண்டுள்ளது. மேலும் 300ml கரும்பு சாறில் வெறும் 111 கலோரிகளே உள்ளது. கரும்பு ஜூஸ் குடிப்பதனால் நமது உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.
ஜீரண சக்திக்கு உதவும் நார் சத்து இதில் அதிகம் இருப்பதால் ஜீரணம் இல்லாமல் அவதி படுபவர்கள் கரும்பு ஜூஸ் குடிக்கலாம். மேலும், கரும்பு ஜூஸுடன் சேர்க்கப்படும் இஞ்சி ஜீரண சக்திக்கு மேலும் உதவுகிறது. மலசிக்கல் உள்ளவர்கள் கரும்பு ஜூஸ் குடிப்பதனால் மலசிக்கல் குணமடைகிறது.
நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும். கரும்புச் சாறில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்களின் உறுதித் தன்மைக்கு உதவும். வாய் துர்நாற்றத்தை அகற்ற இது மிகசிறந்த பானம். முகப்பருக்களை அகற்றும் சக்தி கரும்பு ஜூஸுக்கு உண்டு. பெண்களைத் தொடரும் மார்பகப் புற்று நோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே அகற்றும் சக்தி கரும்பு ஜூஸுக்கு உண்டு.