முகத்திற்கு ஆவி பிடிப்பதால் நிகழும் அதிசயம்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!health-benefits-of-steam-bath

முகத்திற்கு ஆவி பிடித்ததால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக சரும அழகு மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. அதன்படி ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைப்பட்டிருக்கும் என்னை மற்றும் அழுக்கை வெளியேற்றும். இதனால் முகப்பருக்கள் குறையும்.

Steam bath

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த சரும செல்கள் நீங்கி, புதிய சரும செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால், முக சருமம் மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இது முகப்பருக்களை குணப்படுத்த உதவும். மேலும், முகப்பருக்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

Steam bath

குறிப்பாக சளி பிடித்திருந்தால் ஆவி பிடித்தால் மூக்கில் உள்ள சளி வெளியேறி விரைவில் குணமடையும். மேலும், தலைவலிக்கு காரணமான தசை பதற்றம் குறையும். இதனால் தலைவலி குணமாகும்.

அதேபோல் ஆவி பிடிப்பதால் சைனஸ் குழிகளில் உள்ள சளி தளர்ந்து, வெளியேறும். இதனால் சைனஸ் பிரச்சினைகள் விரைவில் குணமாக்கும்.