மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவு பெட்ரூம் செல்லும்போது ஏன் தேன் பாட்டிலுடன் உள்ளே செல்கிறார்கள் தெரியுமா..? அதன் முக்கிய காரணம் இதோ..!

Summary:

Health benefits of having honey before sleeping at night

இயற்கை நமக்கு கொடுத்த மிகவும் பயனுள்ள, ஆரோக்கியமான உணவு பொருட்களில் ஒன்று தேன். சுத்தமான தேனை சாப்பிடுவதால் நமது உடலில் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதுவே தேனை சில உணவு பொருட்களுடன் கலந்து சாப்பிடுவதால் மேலும் சுவை கூடுகிறது.

அதேநேரம், தேன் சாப்பிடும் நேரத்தை பொருத்தும் அதன் பலன் நமது உடலுக்கு கிடைக்கிறது. அந்த வகையில் இரவு தூங்குவதற்கு முன் தேன் சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

* தேனில் ட்ரிப்டோஃபேன் என்ற ஹார்மோன் உள்ளது. இது நமது உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. இரவில் தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதன் மூலம் நல்ல உறக்கம் கிடைக்க உதவுகிறது.

* இதயம் சம்மந்தமான நோய்களுக்கு உயர் இரத்த அழுத்தமும் ஒரு காரணம். உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதய நோய்கள் ஏற்படாமல் இருக்க இரத்த அழுத்தத்தை சராசரியாக வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். தேனில் உள்ள ஆன்டி-ஆகஸிடன்ட்டுகள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

* இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க தேன் உதவுகிறது. ஒருவரின் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பினாலும், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்கள் உருவாகிறது. இரவில் தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைந்து இந்த நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

* தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்க்கு எதிராக போராடும் சக்தியை அதிகரிக்கிறது.

* இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இது உடல் வெப்பநிலையை சிறிது அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, எவ்வித கஷ்டமுமின்றி உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.


Advertisement