நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாதாம் பிசின்.? வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!?Health benefits of eating badham pisin

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பாதாம் பிசின்

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடலுக்கு ஊட்டச்சத்து தரும் உணவுகளை பலரும் விரும்புவதில்லை. இதற்கு மாறாக பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாதாம் பிசினை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் வேற என்னென்ன மாற்றங்கள் மற்றும் என்ன நோய்களை குணப்படுத்தும் என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்.

Healthy

பாதாம்

பிசின் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

1. இயற்கையான குளிரூட்டியாக கருதப்படும் பாதாம் பிசின், அதிக உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. செரிமான பிரச்சனையை சரி செய்வதோடு, வயிற்றில் ஏற்படும் அமில பிரச்சனைகளை சீராக்குகிறது.
3. மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
4. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பாதாம் பிசினை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் விரைவில் குணமாகும்.
5. பாதாம் பிசினில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் ஆண்டிரேடிக்கல்களை எதிர்த்து போராடும் குணமுடையது என்பதால் விரைவில் முதிர்ச்சி அடைய செய்யாமல் இளமையாக இருக்க உதவி செய்கிறது.
6. மூச்சுக் குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அலர்ஜி, ஆஸ்துமா, நுரையீரல் நோய் போன்றவற்ற குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
7. பாதாம் பிசினை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் பசியை கட்டுப்படுத்துவதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.

இதையும் படிங்க: உடனடி தீர்வு.! 10 நிமிடத்தில் மலச்சிக்கலை சரி செய்ய இதை குடிங்க போதும்.!?

Healthy

8. உடலில் உள்ள கொழுப்புகளை வெளியேற்றுவதோடு, நரம்பு மண்டலத்தில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

9. வயதில் முதிர்ந்தவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் பாதாம் பிசினை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூட்டு வலி, முதுகு வலி போன்றவற்றை சரி செய்கிறது.

இதையும் படிங்க: சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்ற இந்த தண்ணீர் போதும்.!?