வெறும் வயிற்றில் தக்காளி சாறு குடிப்பதால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா.!?

வெறும் வயிற்றில் தக்காளி சாறு குடிப்பதால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா.!?


Health benefits of drinking tomato juice

பொதுவாக நாம் அன்றாட வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாக பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்த தக்காளியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாறாக குடித்து வந்தால் பல நன்மைகள் உடலில் ஏற்படும். இதன் மூலம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக காணலாம்?

Tomato

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு தக்காளிகளை அதில் போட்டு சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்பு தக்காளிகளை எடுத்து குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேன் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அரைத்து குடித்து வரலாம். தக்காளியின் தோலை நீக்காமல் அப்படியே அரைத்து குடிப்பது மேலும் நன்மையை ஏற்படுத்தும்.

தக்காளி சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்
தக்காளி சாறு குடிப்பதால் வெயில் காலத்தில் சருமத்தை தாக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து நம்மை காக்கிறது. தோலை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவி செய்கிறது. முதுமையிலும் இளமையாக இருக்க நம் தோலிற்கு கொலோஜன் மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த கொலஜன் உற்பத்தியை தக்காளி சாறு குடிப்பதால் அதிகப்படுத்தலாம்.

Tomato

உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றி செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாறு குடித்து வந்தால் அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, சுறுசுறுப்பாகவும் இருக்க செய்கிறது.