அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
குழந்தையின்மைக்கு தீர்வு தரும் பீர்க்கங்காய்.. ஆண்களே கண்டிப்பா சாப்பிடுங்க.!
மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளடக்கிய இந்த பீர்க்கங்காயை பலரும் பயன்படுத்தாமல் அதன் நன்மைகளை புறக்கணிக்கின்றனர். பீர்க்கங்காய் இருப்பதையே தற்போது பல குடும்பங்கள் மறந்து விட்டன என்று தான் கூற வேண்டும். பீர்க்கங்காயின் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு சத்து, விட்டமின் சி, டயாமின், புரதச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த பீர்க்கங்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
குழந்தையின்மை பிரச்சனை :
சமீப காலமாக ஆண்மை குறைபாடு பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தையின்மை தலை தூக்கி உள்ளது. எனவே ஆண்மை குறைவாக இருக்கும் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க அன்றாடம் தங்களது உணவில் பீர்க்கங்காயை பயன்படுத்தலாம். இதில் பீட்டா கெரோட்டின் உயிர்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. கண் பார்வை சரியாக இல்லாதவர்கள் தினமும் பீர்க்கங்காய் சாரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். மூலநோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஒரு அருமருந்து. மலச்சிக்கலை நீக்கி மூலநோயை கட்டுக்குள் வைக்கும். செரிமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளே.! வாந்தி, மயக்கத்திற்கு சூப்பரான தீர்வு.! உடனே ட்ரை பண்ணுங்க.!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் :
பீர்க்கங்காய் வேரை பொடி செய்து வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து அன்றாடம் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கறையும். சர்க்கரை வியாதி இருப்பவர்கள் பீர்க்கங்காயை அன்றாடம் உணவில் சாப்பிடுவதால் இன்சுலின் இயற்கையாக சுரக்கும் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது நீர்ச்சத்து அதிகம் கொண்ட பீர்க்கங்காய் வயோதிகத்தை தடுத்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. பித்தம், கபம் உள்ளிட்ட தோஷங்களை பீர்க்கங்காய் நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பீர்க்கங்காய் சாறு மட்டுமல்ல. அதன் இலைகளும் காயத்திற்கு நல்ல மருந்தாக இருக்கும்.
இதையும் படிங்க: விந்தணுக்கள் அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகள் கட்டாயம்!