BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பலாப்பழத்தின் நன்மைகள்!
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகவும் உள்ளது. ஆனால் பலாப்பழம் பெரும்பாலும் கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாக உள்ளது.
எனவே பலாப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பலாப்பழத்தின் நார் சத்து நிறைந்துள்ளதால் பல வகையான நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

பலாப்பழம் சாப்பிடுவதால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளை போக்குகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.
பலாப்பழத்தில் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு சிறந்த தீர்வளிக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கள் செரிமான அமைப்பை மேம்படுத்தி அல்சர் மற்றும் வாய்ப்புண்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. எனவே ஆரோக்கியம் தரும் பலாப்பழத்தை கிடைக்கும் போதெல்லாம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.