கோடையில் குளிர்ச்சி தரும் ஆட்டு மூளை.! எப்படி பயன்படுத்துவது.?!

கோடையில் குளிர்ச்சி தரும் ஆட்டு மூளை.! எப்படி பயன்படுத்துவது.?!



goat-brain-benefits

கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் வெப்பத்தை தனிக்க ஆட்டு மூளை சாப்பிட்டு வந்தால் நல்ல பயன்தரும். இயற்கையாகவே ஆட்டு இறைச்சி உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மைக் கொண்டது. அதனால் கோடைக்காலத்தில் ஆட்டு மாமிசம் மற்றும் அதன் மூளையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். 

ஆட்டு மாமிசத்தில் புரதச்சத்து, இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. பொதுவாக ஆட்டின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு அற்புத பலனைத் தரக்கூடிய வகையில் அமைகிறது. இதன் கால் பகுதியை சூப் செய்து குடித்தால் மூட்டுவலி மற்றும் சளி இருமலைக் குணமாக்கும். சிலர் ஆட்டின் மூலையை மட்டும் தனியாக வறுத்து சாப்பிடுவார்கள். 

Goat brainஆட்டுக்கறி சுவைமிக்கது என்பதால் குழந்தைகளும் விரும்பி உண்ணுகிறார்கள். ஆட்டின் மூளை மனித மூளைக்கு ஏராளமான சக்தியைக் கொடுக்கிறது. கண்களைக் குளிர்ச்சி அடையச் செய்கிறது. நினைவாற்றலை அதிகரித்து, புத்தியைக் கூர்மையாக்குகிறது.

ஆட்டு மூளையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், மெட்டாலிக் சுவையும் உள்ளது. இந்த கறியை சமைக்கும் போது நன்கு மசாலாவை அரைத்து சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதில் கெட்டக் கொழுப்பு மிகவும் குறைந்த அளவிலே காணப்படும். பாஸ்பரஸ் உள்ளதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். 

Goat brainஆட்டு மூளையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், வைட்டமின் பி12, ஜிங்க் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. ஆட்டு மூளையில் உள்ள ஜிங்க் சத்தானது, ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கோடைக்காலத்தில் ஆட்டும் மாமிசத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.