லைப் ஸ்டைல்

புலியாக மாறும் பெண்கள்..! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அற்புத காட்சி.! வைரல் வீடியோ.!

Summary:

Girls transform into tiger video goes viral

இந்த உலகில் திறமைக்கும், திறமையாளர்களும் பஞ்சம் இல்லை என்பதை அவ்வப்போது நடக்கும் சில விஷயங்கள் நமக்கு புரியவைத்துவிடுகிறது. அந்த வகையில், உடல் முழுவதும் சாயத்தை பூசிக்கொண்டு நொடி பொழுதில் நான்கு பெண்கள் புலிபோல் மாறும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பிரபல தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், உடல்முழுவதும் புலிபோல் வண்ணங்களைப் பூசியிருக்கும் 4 பெண்கள் ஒரு அரை லைட்டிங் மேடையில் ஒருவர் மீது ஒருவராக ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமர்கின்றனர்.

அவர்கள் நால்வரும் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்தபிறகு மிகப்பெரிய உருவம் ஓன்று புலப்படுகிறது. மிக பெரிய புலி ஓன்று தனது வாலை ஆட்டிக்கொண்டு, முறைத்து பார்போதுபோல் தோன்றுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement