இந்தியா லைப் ஸ்டைல் சமூகம்

விடிய விடிய பலாத்காரம் செய்து அந்த இடத்தில் கம்பால் தாக்கி கொலை செய்த முன்னாள் கணவர்; நண்பர்களுக்கும் வலைவீச்சு!

Summary:

girl raped and killed by her former husband in jarkand

அன்று இரவு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற அந்த பெண்ணை அவருடைய முன்னால் கணவரும் மற்ற 2 உதவியாளர்களுடன்  கடத்திச் சென்று கற்பழித்து அந்த இடத்தில் கம்பால் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்தப் பெண் துடிதுடித்து இறந்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியில் ஒரு பெண் மூன்று நபர்களால்  கற்பழிக்கப்பட்டும் அந்தரங்க இடத்தில் குச்சியை சொருகியதாலும் அந்தப் பெண் இரவு முழுவதும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த மூவரில் அவருடைய முன்னாள் கணவரும் ஒருவர் ஆவார்.

இதனை தொடர்ந்து அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல்துறையினர் "கடந்த புதன்கிழமை இரவு அந்தப் பெண் தனியாக தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது அந்த பெண்ணின் முன்னாள் கணவர் தனது இரண்டு உதவியாளர்களுடன் அங்கு வந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். ஒரு கிராமத்தின் ஒதுக்குபுறமாக இருக்கும் வயலுக்கு அந்தப் பெண்ணை கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக மூவரும் பலாத்காரம் செய்துள்ளனர். அடாது மட்டும் விட்டுவிடாமல் அவளுடைய அந்தரங்க உறுப்பில் குச்சியை வைத்து சொருகியும் சித்திரவதை செய்துள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு மூவரும் தப்பி ஓடியுள்ளனர். இரவு முழுவதும் துடித்துத் துடித்து கொண்டிருந்த அந்தப் அந்தப் பெண்ணின் முனகல் சத்தம் காலையில் வயலுக்கு வந்த சிலருக்கு கேட்டுள்ளது. சத்தத்தை கேட்டு அவர்கள் ஓடிச் சென்று பார்த்தபொழுது அந்த பெண் இரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டு இருந்துள்ளார். உடனே  பெண்ணை நாராயன்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி இல்லாததால் ஜம்தாரா சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

gang rape with friends in india க்கான பட முடிவு

அதனைத்தொடர்ந்து அவரை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண் மருத்துவமனைக்கு வரும் வழியில் "தன்னுடைய முன்னாள் கணவர் தான் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி வந்து என்னை இப்படி செய்து விட்டார்" என கூறியுள்ளார். அதன்பேரில் அந்த பெண்ணின் முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement--!>