லைப் ஸ்டைல்

பாம்பின் மீது அமர்ந்து சாகசம் செய்யும் தவளை..! ஆஹா..! என்ன ஒரு ஜாலி..! வைரல் வீடியோ உள்ளே..!

Summary:

Frog ride on snake video goes viral

பொதுவாக பாம்பை பார்த்தாலே தவளை தலைதெறிக்க ஓடிவிடும். காரணம் பாம்பு தவளையை உணவாக உட்கொள்ளும் என்பதால்தான். ஆனால், தவளை ஒன்று பாம்பு மீது அமர்ந்து ஜாலியாக ரைடு போகும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள 9 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், தவளை ஒன்று மண்ணுளி பாம்பின் மீது அமர்ந்து கொண்டு விளையாடும் குறும்பு வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், பாம்பும் தவளையும் நண்பர்கள் போல் இணைந்து சாகசம் செய்வதுபோல் அந்த காட்சி இடம் பெற்றுள்ளது. பாம்பின் மீது அந்த தவளை ஏறிக்கொள்ள, பாம்பு நகரும்போது அதன் மேல் அமர்ந்துகொண்டு தவழும் நகர்கிறது.

அந்த காட்சிகளை நீங்களே பாருங்கள்.


Advertisement