மருத்துவம் லைப் ஸ்டைல் 18 Plus

இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் உங்கள் ஆண்மையைத் தூண்டிவிடும்..! இதெல்லாம் நீங்க சாப்பிடறீங்களா?

Summary:

Foods for improve fertility details in Tamil

வளர்ந்து வரும் இந்த நாகரீக உலகில் முறையற்ற உணவுப் பழக்கங்களால் நமது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பல்வேறு ஆண்களுக்கு இன்று தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது ஆண்மை குறைபாடு.

ஆண்மை குறைபாடு, தாம்பத்திய உறவில் நாட்டம் இன்மை  போன்ற பிரச்சனைகளை போக்க நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மிக முக்கிய பங்காற்றுகிறது.

1 . பிஸ்தா:
ஆண்மை குறைபாட்டை போக்க பிஸ்தா ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. தினமும் ஒரு கைப்பிடி அளவு பிஸ்தா பருப்பு சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு, விறைப்புத்தன்மை பிரச்சனை, பாலியல் உணர்வு சம்பந்தமான பிரச்சனை ஆகியவை நீங்கும்.

2 . தர்பூசணி:
சீரான ரத்த ஓட்டம் என்பது நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. தர்பூசணி பழத்தில் இருக்கும் நைட்ரிக் ஆக்சைடு ஆணுறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் தர்பூசணி பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும்.

3 . பூண்டு:
நம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் ஒன்று பூண்டு. பூண்டு நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. குறிப்பாக பூண்டு ரத்தக் குழாய்களை தளர்த்துவதன் மூலம் ஆண் உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பூண்டில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு ஆண் உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.  உணவில் தினமும் பூண்டு சேர்த்துக் கொண்டால் ஆண்மை பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும்.

4 . தக்காளி:
ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த உணவாக தக்காளி உள்ளது. குறிப்பாக தக்காளியில் உள்ள லைகோபீன் ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடென்ட் ஆகும். இவை ஆண்களின் புரோஸ்டேட் என்னும் ஆண்மை சுரப்பி ஆரோக்கியத்தை அதிகரித்து பாலுணர்வை தூண்டுகிறது.

5 . வாழைப்பழம்:
சாதாரணமாக கிடைக்கும் வாழைப்பழங்கள் கூட ஆண்களின் ஆண்மை பிரச்சனையை போக்கும் ஒரு தீர்வாக அமைகிறது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி போன்றவை உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வாழைப் பழத்தில் உள்ள ப்ரோமிலைன் எனும் நொதி ஆண்களின் காம உணர்வை அதிகரித்து பாலியல் உறவில் ஈடுபட தூண்டுகிறது.


Advertisement