பாவம்பா அந்த டிரைவர்.. மனுஷனுக்கு அல்லுவிட்டுப்போச்சு.. பஸ்ஸை மறித்து யானை செய்த சிறப்பான சம்பவம்Elephant stops bus and take banana from bus viral video

இலங்கையில் காட்டுப்பகுதி வழியாக சென்ற பேருந்து ஒன்றை யானை ஒன்று வழிமறித்து பேருந்தில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான பிரவீன் கஷ்வான் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 43 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், காட்டு வழியாக செல்லும் பேருந்து ஒன்றை வழிமறிக்கும் யானை ஒன்று, தனது தும்பிக்கையை பேருந்தின் ஜன்னல் வழியாக உள்ளே விட்டு பேருந்தில் இருக்கும் வாழைப்பழத்தை எடுத்து செல்கிறது.

viral video

யானையின் இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத பேருந்து ஓட்டுநர் யானையின் தும்பிக்கைக்கு இடையே மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கிறார். மேலும் பேருந்துக்குள் இருக்கும் மற்றொருவர் யானையை சமாளிக்க அதற்கு தேவையான உணவு பண்டங்களை எடுத்து யானையிடம் கொடுக்கிறார்.

இறுதியில் யானை வாழைப்பழத்தை வாங்கிக்கொண்டு தும்பிக்கையை வெளியே எடுக்க, ஆலவிடுடா சாமி என பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக கிளம்புகிறார். இந்த வீடியோ காட்சி பழமையான ஒன்றாக இருந்தாலும் தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

பிரவீன் கஷ்வான் வெளியிட்டுள்ள அந்த பதிவில், இதற்காகத்தான் காட்டு விலங்குகளுக்கு உணவளிக்க கூடாது என கூற காரணம் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.