காய்ந்த மிளகாயில் மஞ்சள் நிற தோற்றம் உள்ளதா?.. இல்லத்தரசிகளே உஷார்.. புற்றுநோய் அபாயம்..!Dry Capsicum Yellow Infection May Cause Cancer

 

நமது வீட்டு சமயலறையில், மிளகாய் பொடி தயாரிக்க மற்றும் பிற குழம்பு மிளகாய் பொடிகளுக்கு பிரதானமாக இருப்பது காய்ந்த மிளகாய். 

காய்ந்த மிளகாய், சீரகம், மல்லி உள்ளிட்ட பல பொருட்களை சேர்ந்து நாம் மிளகாய் தூள் தயாரித்து குழம்பு வகைகளில் சேர்த்து பயன்படுத்தி வருகிறோம். 

இப்படியாக மிளகாய் தூளில் பிரதானமாக பயன்படுத்தப்படும் மிளகாய் உடலில் இருக்கும் புற்றுநோயை விரட்டி அழிக்கும் தன்மை கொண்டது ஆகும். 

ஆனால், காய்ந்த மிளகாயில் பார்க்க மஞ்சள் கலந்த நிறம் கொண்டு இருப்பவை, அதே புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

காய்ந்த மிளகாயில் அங்கங்கே அல்லது ஒரு இடத்தில் மஞ்சள் நிறம் தென்படும் பட்சத்தில், அதனை சமைக்கவோ அல்லது பிற பயன்பாட்டுக்கோ உபயோகம் செய்ய கூடாது. 

இதில் இருக்கும் அஃப்லா டாக்ஸின் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும், இனி சமையலில் காய்ந்த மிளகாய் சேர்க்கும்போது மஞ்சள் தன்மையுடன் இருந்தால் அதனை ஒதுக்கிவிட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.