தண்ணீர் குடிக்க எது சரியான நேரம் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!drinking-water-timings

மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவை மற்றும் அத்தியாவசியமான தேவை ஒன்று தான் தண்ணீர். அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு நல்லது தான் என்றாலும் கூட சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டுமா அல்லது சாப்பிடுவதற்கு முன்பே குடிக்க வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

மேலும், சிலருக்கு சாப்பிடும் போதே தண்ணீர் குடிக்கலாமா என்ற சந்தேகமும் உள்ளது. எனவே எந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

drinking water

சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் குறைவாக சாப்பிட்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் பலரும் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்க தயங்குகின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பாக தண்ணீர் குடித்தால் சரியாக சாப்பிட மாட்டார்கள் என கூறுகின்றனர்.

நாம் சாப்பிடும் சாப்பாடு செரிமானம் அடைய குறைந்தது 2 மணி நேரமாகும். சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் அது உணவு செரிமானம் அடைவதை பாதிக்கும். எனவே 45 முதல் 60 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது.

drinking water

அதன்படி சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் குடித்தால் உடல் எடை கட்டுக்குள் வைத்திருக்கலாம். சரியான நேரத்தில் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் எதுவும் வராது.

மேலும், சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் பல சத்துக்களை உடல் நன்றாக  உறிஞ்சி கொல்லும். இதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்ல தூக்கத்தை கொடுக்கும்.