அதிகாலையில் பூனை கடிப்பது போன்று கனவு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஆபத்து நிச்சயம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...

பலருக்கும் அதிகாலை கனவுகள் பழிக்குமா என்பது பெரிய சந்தேகமாக இருக்கும். குறிப்பாக பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் கனவுகள் பலருக்கும் திகில் தரக்கூடியதாக இருக்கிறது. அந்த நேரத்தில் திடீரென எழும் போது அந்த கனவுகள் நம்மை மனதளவில் பாதிப்பதாக உணர்கிறோம்.
பூனை கனவில் வந்தால் என்ன அர்த்தம்
பூனைகள் நம் கலாச்சாரம் மற்றும் பரம்பரைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எகிப்து போன்ற நாடுகளில் பூனை ஒரு புனித பிராணி என மதிக்கப்படுகிறது. அது மகிழ்ச்சி, பாதுகாப்பு, ஆரோக்கியத்துடன் தொடர்புபட்டதாக கருதப்படுகிறது.
ஜப்பான் நாட்டிலும் பூனைகள் ஆன்மாக்களின் பாதுகாவலர்கள் என நம்பப்படுகிறது. மேலும், மந்திரவாதம் மற்றும் பெண்மையை பிரதிபலிக்கக்கூடிய ஒரு குறியீடாகவும் பூனைகள் பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி! முழு விபரம் உள்ளே...
கருப்பு பூனை கனவின் விளக்கம்
கருப்பு பூனை கனவில் தோன்றுவது பொதுவாக அமானுஷ்ய சக்திகள் மற்றும் அபாயம் குறித்த எச்சரிக்கையாக கருதப்படுகிறது. அதிகாலையில் இப்படிப்பட்ட கனவு வந்தால், உங்கள் வாழ்க்கையில் அசாதாரணமான சவால்கள் வரக்கூடும்.
இது போன்ற கனவுகள் முடிவு எடுக்க வேண்டிய நிலையில் கவனமாக இருக்க வேண்டியதைக் குறிக்கின்றன.
கோபமான பூனை கனவு
பூனை கோபமாக இருப்பது போல கனவில் தோன்றினால், அதுவே பெண்களுடன் தொடர்புடைய ஒரு அறிகுறி ஆக இருக்கலாம். உங்கள் வாழ்வில் ஒரு பெண் நெருக்கமான நிலையில், அல்லது துன்பத்தில் இருக்க வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இது உங்கள் உணர்வுகளுக்குள் உள்ள போராட்டத்தையும் குறிக்கலாம்.
கனவுகள் நம் உளவியலை பிரதிபலிக்கின்றன
நம் தினசரி எண்ணங்கள், பயம், எதிர்பார்ப்பு போன்றவை கனவுகளின் வழியாக வெளிப்படுகின்றன. குறிப்பாக அதிகாலை நேரம் மனமும் உடலும் மிக நுணுக்கமாக செயல்படும் நேரமாக இருப்பதால், அந்த நேரத்தில் வரும் கனவுகள் சிறிது வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிகாலை பூனை கனவுகள் பலவகையான அர்த்தங்களை கொண்டிருக்கும். அவை நம் உணர்ச்சி நிலையும், வாழ்க்கை அனுபவங்களையும் பிரதிபலிக்கக்கூடும். அதை தீமையாகவே பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கனவின் நேரம், பூனையின் நிலை, உங்கள் மனநிலை ஆகியவை பொருத்தப்பட்டால் அதன் உண்மை அர்த்தம் தெரிந்துகொள்ள முடியும்.
இதையும் படிங்க: சமையலறையில் இந்த பொருட்களை எல்லாம் தலைகீழாக வைக்க கூடாது! வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின் உண்மை..