அச்சச்சோ.. உங்களின் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா?.. உடனடியாக செய்யவேண்டியவை இவைதான்.!

அச்சச்சோ.. உங்களின் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா?.. உடனடியாக செய்யவேண்டியவை இவைதான்.!



Do This When Smartphone fall Down on water

இன்றுள்ள தலைமுறைக்கு செல்போன் தான் உலகம். தன்னைவிட தனது செல்போனையே அவர்கள் அதிகம் பாதுகாப்பாய் பயன்படுத்துகிறார்கள். மழை பெய்தால் தனக்கு என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒரு சிறிய கவலை கூட இல்லாமல் செல்போனை முதலில் பாதுகாக்கிறார்கள்.

ஒரு சில நேரம் நமது செல்போன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து விடலாம். அப்போது என்ன செய்வது? என்று பலருக்கும் தெரியாது. தண்ணீரில் செல்போன் விழுந்துவிட்டால் உடனடியாக எந்த விதமான பதற்றத்திற்கும் உள்ளாகாமல், செல்போனை எடுத்து சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். 

தண்ணீர் அதிகமாக உள்ளே செல்லாமல் இருக்க டெம்பர் கிளாஸ், கவர் போன்றவற்றை கழற்றி சிம்கார்டு, மெமரி கார்டு ஆகியவற்றை வெளியே எடுக்க வேண்டும். உலர்ந்த துணியை கொண்டு மொபைலை நன்கு துடைத்து அதில் உள்ள ஈரத்தை காய வைக்க வேண்டும்.

Technology

அதேபோல ஈரத்தை குறைப்பதற்கு ஹேர் டிரையர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். அதிலிருந்து வரும் காற்று சூடானது என்பதால் அது தண்ணீரை மேலும் செல்போனுக்குள் போக வழிவகை செய்யும். நீர் செல்போனில் இருந்து வெளியேற வேண்டும் என்று அதனை வேகமாகவும் அசைக்க கூடாது. 

செல்போனை உபயோகம் செய்யாமல் சிறிது நேரம் அதனை உலர விட வேண்டும். சிலர் அரிசிக்குள் செல்போனை வைத்தும் எடுப்பார்கள். செல்போனை நன்கு துடைத்து சிறிது நேரமான பின்னர் அல்லது 2 மணி நேரம் கடந்த பின்னர், அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச்சென்று விஷயத்தை கூற வேண்டும். 

அவர்கள் செல்போனை பகுதியாக பிரித்து நீர் இல்லை எனில் நம்மிடையே அப்படியே கொடுத்து விடுவார்கள். மாறாக பதற்றத்தில் செல்போனை எடுக்காமல் நீண்ட நேரம் கழித்து எடுத்து பின் உணர வைப்பதோ அல்லது உடனடியாக செல்போனை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லாமல் தாமதமாக செயல்படுவதோ செல்போனை சேதப்படுத்தலாம்.